ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

மன அறை


வீணை பிடிக்குமோ அதன் இசை கட்டாயம் பிடிக்கும். சில பொழுதுகள் இனிமை சேர்க்கும். எல்லோருக்கும் மனதின் உள்ளே ஒரு மனம் இருக்கும். தனியறை. இது வரை யாருக்கும் எதற்காகவும் திறந்து விடப்படாத அறை. நமக்கே நமக்கென்று ஓர் அறை. அதன் வாயில்கள் தாழிடப் பட்டு இருந்தாலும் நாம் மட்டும் போய் வரலாம் நம்மையும் அறியாமல். அதனுள்ளே என்றென்றும் இழைந்து உருகி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நாதம்...

சனி, 5 டிசம்பர், 2009

நகரும் நாட்கள்

இடை வெளி விட்டுப் பின் வேலையில்

இணைவதுமான என் நாட்கள்.

வேலையில் உள்ள போது

உலகில் எல்லாமே நல்லவைகளாய்...

பின் வேலையில்லாத போது

உலகமே இருட்டாய் ....

கவிஞனுக்கும் கை வினைஞனுக்கும்

எப்போதும் ஓயவில்லை.

சோர்வான வாழ்வில்லை.
கற்றுக்
கொண்டேன்.

கவிஞனாக
கை
வினைஞநாக.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

அழகான காலைப்பொழுது

ஒவ்வொரு நாளும் விடிகிறது ஒவ்வொரு மாதிரியாய். ஆனால் எல்லாக் காலைப்பொழுதுமே ரம்மியமானதுதான். விடியற்காலை எழுந்து வீடு வாசல் பெருக்கிக் குளித்து உற்சாகம் அடையும் பாங்கு குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. ஒன்று மிகவும் அதிகாலை எழுந்து ஓடி விடிகிறோம். அல்லது போர்வையினுள் தூங்கி விடுகிறோம். வாழ்க்கை மாறி விட்டது உண்மை தான். ஆனால் அதை இன்னும் சிறிதளவேனும் பழமை மாறாமல் வைத்திருந்தோமானால் உடலும் மனமும் உற்சாகமாய் இருக்கும் . ஐந்தரை மணிக்கே எழுந்து விட்டால் உடல் நலக் குறைவுள்ளவர்கள் கூட அந்த நாளின் வித்தியாசத்தை உணர முடியும். முடிந்தவரை வீட்டில் உணவு செய்து சாப்பிடுங்கள். உணவு மேஜையை சுத்தமாக வைத்திருங்கள். நாம் வழி வழியாகச் சாப்பிட்டு வந்த உணவையே சமையுங்கள். மகிழ்ச்சியோடு அருந்துங்கள். அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள்.

தோழிக்கு

தோழிக்கு என்னும் இந்த புதிய வலைப்பூ பெண்களின் நலன் கருதி தொடங்கப்பட்டது. பெண்கள் நாட்டின் கண்கள். வீட்டு நலனில் மட்டும் அக்கறை கொள்வதோடு நின்று விடாமல் நாட்டு நலனில் மறைமுகமாக நன்மை செய்வது நம் பண்பு. சிறிய முயற்சிகள், சிறிய சவால்கள் பெரிய நன்மைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. கதைகள், கட்டுரைகள், குறிப்புகள், எண்ணப்பகிர்வுகள், நினைவலைகள் இன்னும் பல்வேறு வகைகளில் இந்த வலைப்பூ நம் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கச் செய்யட்டும். நாட்கள் சுவையுடன் நகரட்டும்.

தோழிக்கு

தோழிக்கு என்னும் இந்த புதிய வலைப்பூ பெண்களின்